கோவையில், ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, அப்படி பேசியே ஆக வேண்டுமென்றால் ரூம் போட்டு பேசுங்கள் என கொச்சையாக பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததாலேயே அந்த பெண் மீது சேற்றை வாரி இறைப்பது போல பேசியிருக்கும் கஸ்தூரியின் கடந்த கால வரலாற்றை எல்லாம் தோண்டினால் நாறி விடும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.’குத்து விளக்கு’ பாடலுக்கு புகழ் பெற்ற நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி, கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பேசிய கொச்சையான கருத்து, விமர்சிக்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையம் அருகே, காரில் ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, 3 பேர் சேர்ந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தை அடுத்து பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் குறித்தும் பல விதமாக கருத்து பகிரப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு ஏன் செல்ல வேண்டும்? ஆண் நண்பருடன் பேச வேறு இடமில்லையா? அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு போனதால் தான் விபரீதம் நிகழ்ந்திருக்கிறது என பிற்போக்குத்தனமாக பேசியவர்கள் வரிசையில் நடிகை கஸ்தூரியும் இணைந்திருக்கிறார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் கோவை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எடுத்ததுமே ஆவேசமாக நேரங்கெட்ட நேரத்தில் வெளியே சுற்றக் கூடாது என அட்வைஸ் மோடில் பேசிய நடிகை கஸ்தூரி, அப்படி பேசியே ஆக வேண்டும் என்றால் ரூம் போட்டு பேசுங்கள் என இரட்டை அர்த்தத்துடன் கொச்சையாக பேசினார்.பாதிக்கப்பட்ட பெண்ணை தவறாக சித்தரிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.கோவை மாணவி வன்கொடுமை விவகாரத்தை திமுக அரசுக்கு எதிராக முன்னிறுத்தி பாஜக போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்து சர்ச்சையாகி வருகிறது.ஒரு வேளை அந்த கல்லூரி மாணவி தனது தந்தையுடன் சென்றிருந்து பாதிக்கப்பட்டு இருந்தால் நடிகை கஸ்தூரி வாயில் இருந்து என்ன வார்த்தை வந்திருக்கும் என்பதும் அவரை நோக்கி எழும் கேள்வியாக உள்ளது.ஒரு சில படங்கள், சில குத்து பாடல்கள் என கஸ்தூரியின் சினிமா வாழ்க்கை மிக மிக குறைவாக இருந்தாலும், கஸ்தூரி குறித்த சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது.அடிக்கடி வாய் துடுக்காக பேசி மாட்டிக் கொள்ளும் நடிகை கஸ்தூரி, கடைசியாக தெலுங்கு சமூகம் குறித்து பேசி மாட்டிக் கொண்டு கைதாகும் நிலைக்கு ஆளாகினார்.ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி வெளியே செல்ல கூடாது என பாதிக்கப்பட்ட பெண்ணை குறிப்பிட்டு அட்வைஸ் சொல்லும் நடிகை கஸ்தூரி, அந்த இளம் பெண்ணை நாசம் செய்த கயவர்கள் குறித்து வாய் திறக்காமல் கடந்து செல்வது மோசமான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.தவறு செய்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கியே கேள்வி எழுப்பும் கஸ்தூரியின் பேச்சை பார்த்துநெட்டிசன்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.அந்த இடத்திற்கு போகாமல் இருந்தால் இப்படி நடந்திருக்காது என கூறும் கஸ்தூரி மாதிரியான நபர்கள், அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாதது குறித்தோ, சமூக விரோதிகள் சுற்றித் திரிந்ததை குறித்தோ எதுவுமே பேசாதது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதையும் பாருங்கள் - BJP Kasthuri Controversy | Room போட்டு பேசுங்கள் என கொச்சை, கோவை மாணவி - கஸ்தூரி சர்ச்சை கருத்து