உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம் என வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளான 'தனிப்பெருங்கருணை நாளை யொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.