கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு மக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் அல்ல திமுக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாக திமுக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும்.கொள்கையில்லா கூட்டத்தை சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொது மக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாகப் புறப்படுவோம்.அண்ணா போதித்த கட்டுப்பாட்டை, கருணாநிதி கட்டிக்காத்து, இன்று உங்களில் ஒருவனான என் தலைமையிலும் அதே கட்டுப்பாட்டுடன் கொள்கைக் கூட்டமாக உடன்பிறப்புகள் திரள்வதை கரூரிலும் காண இருக்கிறேன். லட்சிய வீரர்களாக 2026 தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்பு தான் இந்த முப்பெரும் விழா.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதையும் பாருங்கள்: "கொள்கை பட்டாளமாக கூடுவோம்" - முதலமைச்சர் மடல் | CM Stalin | DMK