ரோகித் சர்மாவிடமிருந்து வீரர்கள் மீது எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதை கற்றுக்கொண்டதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்படும் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் பேசிய ரிஷப் பண்ட், அணியில் உள்ள வீரர்களுக்கு கேப்டன் ஆதரவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.