ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு தொடரில் இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.