ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை பெங்களூரு எப்.சி அணி வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே பெங்களூரு அணி கோல் அடித்து 1-க்கு 0 என முன்னிலை பெற்றது. 2-வது பாதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி மேலும் 1 கோல் அடித்தது. இறுதியில் பெங்களூரு அணி 2-க்கு 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.