நீட் ரத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நீட் தேர்வு ரத்து தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.