தலைமைப் பொறுப்பையும், பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.தன்னுடைய அனுபவத்தில் தாம் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது தனக்கு சிறந்ததாக இருப்பதாக தெரிவித்த சுப்மன் கில், ஃபீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது மட்டுமே தலைமைப் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன் என கூறினார்.