நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டதாக இபிஎஸ் குற்றச்சாட்டு முன் வைத்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம் என அமைச்சர் சக்கரபாணி கூறி உள்ளார். இபிஎஸ் ஆதாரம் தர முடியுமா? - அமைச்சர் சக்கரபாணி;செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என ஆதாரத்துடன் சொல்வதாக இபிஎஸ்-க்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனுமதி வழங்கி விட்டதாக சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரம் தர முடியுமா? என்றும் சவால் விடுத்துள்ளார்.