தமிழக அரசின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப்படுத்துவதாக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான போதைப்பொருள் வழக்கிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த ஆளுநர், போதைப் பொருட்களுக்கு எதிரான திமுக அரசின் தீவிர நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா? என வினவியுள்ள அமைச்சர், அரசியல் பேசுவதையும் - அவதூறுகளை அள்ளி வீசுவதையும் பொழுதுபோக்காக வைத்திருக்கும் ஆளுநர், தனது மாளிகையை கமலாலயமாக மாற்றி தனது பதவிக்கே தினந்தோறும் இழுக்கு தேடி வருவதாக சாடியுள்ளார். நாடு முழுவதும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கும் பாஜக நிர்வாகிகள் மற்றும் போதை பொருள்களின் தலைநகராக திகழும் குஜராத் பற்றியெல்லாம் ஏன் வாய் திறப்பதில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.