சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழ்நாட்டை தலைகுனிய வைத்துள்ளதாக, திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் சிறப்பாக இயங்கிய காவல்துறை, கடந்த 54 மாத கால திமுக ஆட்சியில் தனது கம்பீரத்தை இழந்து விட்டதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், மக்களை காக்கும் சட்டம், ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதாக திமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ள இ.பி.எஸ்., மத்திய தேர்வாணையம் அனுப்பிய பட்டியலில் இருந்து மூத்த காவல்துறை அதிகாரியை, டிஜிபியாக உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.