கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டம்-ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள், குறித்து ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் உளவுத் துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.