கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல், 1 லட்சத்து 90 ஆயிரம் யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. அதேசமயம் பன்ச் மாடல் சுமார் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.