உதம்பூரில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சாம்ரோலி தேவால் பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. இதன் விளைவாக காஷ்மீர் நோக்கிச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த சாலை விரைவில் சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கும் என தெரிவித்துள்ளனர்.