லம்போர்கினி நிறுவனம் ஃபெனோமினோ என்ற புதிய ஹைப்பர் கார் ரக வாகனத்தை ஆகஸ்ட் மாதம் பெப்பிள் பீச் கான்கோர்ஸ் டி'எலிகன்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ரெவெல்டோ மாடலை அடிப்படையாக கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை ஃபெனோமினோ குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல், லம்போர்கினி நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது.