குஜராத், பாவ் நகரில், முகூர்த்ததுக்கு நேரமானதால் மணப்பெண்ணை அழைக்கச் சென்ற தாய். அறைக்குள் ரத்த வெள்ளத்தில் மணப்பெண் சடலமாக கிடந்த கொடூரம். கல்யாண மண்டபத்தில் இருந்து தப்பியோடிய மணமகன். ஒட்டு மொத்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீஸ். மணப்பெண்ணை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தது யார்? மணமகன் தப்பி ஓடியது ஏன்? நடந்தது என்ன?முகூர்த்தத்துக்கு நேரமாச்சு, பொண்ண சீக்கிரம் மணமேடைக்கு கூப்டு வாங்கன்னு ஐயர் சொல்ல, இளம்பெண் சோனி ஹிம்மத்த கூப்ட அவங்க அம்மா மணப்பெண்ணோட அறைக்கு போய்ருக்காங்க. அப்ப அறைக்கு வெளியில நின்ன தாய், சோனி சோனின்னு கூப்டுக்கிட்டே கதவ தட்டிருக்காங்க. ஆனா, ரூம்க்குள்ள இருந்து எந்த ஒரு சத்தமும் கேட்கல. ரொம்ப நேரமாக சோனியோட தாய் கதவ தட்டி பாத்துருக்காங்க. அப்பவும் சோனி கதவ தொறக்கல. இதனால பதற்றமடைஞ்ச தாய், தன்னோட கணவன், சொந்தக்காரங்கள் உதவியோட கதவ உடைச்சுட்டு உள்ளப்போய் பாத்துருக்காங்க.அங்க கல்யாண பெண் சோனி, தலையில பலத்த காயத்தோட ரத்த வெள்ளத்துல உயிரிழந்து கிடந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச பெண் வீட்டுக்காரங்க, உடனே மாப்ளையோட அறைக்கும் போய் பாத்துருக்காங்க. அங்க இளைஞர் சாஜன் பரய்யா இல்ல. அதுக்கடுத்து கல்யாணம் மண்டபம் ஃபுல்லா தேடி பாத்துருக்காங்க. ஆனா எங்க தேடியும் இளைஞர காணல.சாஜன் பரய்யா காணாம போனதால, புதுமணத் தம்பதிக்குள்ள ஏதோ ஒண்ணு நடந்துருக்குன்னு நினைச்ச பெற்றோர், போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொன்னாங்க. இந்த விஷயத்த கேட்டு உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க.அடுத்து இளைஞர் சாஜன் பரய்யா எங்க போனாருன்னு தெரிஞ்சுக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு செஞ்சாங்க போலீஸ். ஆனா, அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல.அதுக்கடுத்து சாஜன் - சோனி இடையில என்ன பிரச்னை நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க அவரோட பெற்றோர் கிட்டயும், பெண் வீட்டுக்காரங்க கிட்டயும் போலீஸ் விசாரிச்சுருக்காங்க. குஜராத்துல உள்ள பாவ்நகர் பகுதிய சேந்த சாஜன் பரய்யா ஒரு கம்பெனியில வேல செஞ்சுட்டு இருந்துருக்காரு. இவரும் அதே பகுதிய சேந்த சோனியும் உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு இருந்துருக்காங்க.ஆனா, ரெண்டு பேரோட வீட்லையும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிருக்கு. இதனால வீட்ட விட்டு வெளியேறுன காதல் ஜோடி கல்யாணம் பண்ணிக்காம வேறொரு ஏரியாவுல ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க.ஒரு நாள், இந்த காதல் ஜோடியோட வீட்டுக்கு போன பெற்றோர், உங்களால எங்க மானமே போய்ருச்சு, இப்படி கல்யாணம் பண்ணிக்காம வாழ்ந்துட்டு இருந்தா ஊர் உலகம் என்ன சொல்லும், ரெண்டு பேரும் எங்களோட வீட்டுக்கு வாங்க, ஒரு முகூர்த்த தேதிய குறிச்சு ரெண்டு பேருக்கும் நாங்களே கல்யாணம் பண்ணி வைக்குறோம்ன்னு சொல்லிருக்காங்க.இதுக்கு ஓகே சொன்ன காதல் ஜோடி, அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டு திருமண ஏற்பாடுகள பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்த ஜோடிக்கு கல்யாணம் நடக்க இருந்துருச்சு. கல்யாணத்துக்கு முந்தன நாள் சாஜன், சோனி, அவங்களோட சொந்தக்காரங்கள்ன்னு எல்லாரும் பெண்ணுக்கு புடவை எடுக்க போய்ருக்காங்க.அப்ப சாஜன், ஒரு புடவைய கைக்காட்டி, இந்த புடவை நல்லா இருக்கு, இத எடுத்துக்கோன்னு சோனி கிட்ட சொல்லிருக்காரு. அதுக்கு சோனி, நீ காட்டுன புடவை எனக்கு பிடிக்கல, நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் புடவைய எடுப்பேன்னு பதில் சொல்லிருக்காங்க. இதனால அந்த ரெண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு.அடுத்து மறுநாள் முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பொண்ணோட ரூம்க்கு போன சாஜன், இந்த சேரிய எனக்கு சுத்தமா பிடிக்கலன்னுட சொல்லிருக்காரு. இதனால ரெண்டு பேருக்கு இடையில மறுபடியும் பிரச்னை ஏற்பட்டிருக்கு.அப்ப சாஜன், கல்யாணத்துக்கு நாங்க தான் பல லட்சங்கள செலவு பண்ணிருக்கோம், உங்க வீட்ல இருந்து செலவுக்கு பணமே கொடுக்கலன்னு சொல்லிருக்காரு. அதுக்கு சோனி, உனக்கு நகையையும் போட்டு, கல்யாணத்துக்கும் நாங்க செலவு பண்ணணுமான்னு கேட்ருக்காங்க...அப்ப சாஜன் பெண் வீட்டுக்காரங்கள ரொம்ப மட்டம் தட்டி சோனி கிட்ட பேசுனதா கூறப்படுது. சாஜன் பேசுனத கேட்டு இன்னும் கோபமான சோனி, இதேமாதிரி பேசிட்டு இருந்தன்னா, நடந்த எல்லாத்தையும் எங்க வீட்ல சொல்லி கல்யாணத்த நிறுத்திருவேன்னு மிரட்டிருக்காங்க. இந்த வாக்குவாதம் இவங்களுக்குள்ள மோதலா மாறிருக்கு.அப்ப சோனி மேல கடும் கோபமடைஞ்ச சாஜன், இரும்பு ராட எடுத்துட்டு வந்து சோனிய தலையிலையே சரமாரியா அடிச்சுருக்காரு. இதுல நிலைக்குலைஞ்ச சோனி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், தலைமறைவா இருக்குற சாஜனோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி அவர தேடிட்டு இருக்காங்க. திருமணம் அன்னைக்கு மணமகளை மாப்பிள்ளையே அடிச்சு கொன்ன சம்பவம் குஜராத்துல பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு... இதையும் பாருங்கள் - அதிமுக எம்எல்ஏ சுட்டுக் கொ*ல, பவாரியா கொள்ளையர் வெறிச்செயல், வரும் 21ம் தேதி நடக்கபோவது என்ன?