ரேபிடோ பயணத்தின் போது, துன்புறுத்தலுக்கு ஆளான பெண், சாமர்த்தியமாக செயல்பட்டு, சபாஷ் வாங்கியுள்ளார். வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு, ரேபிடோவில் வீடு திரும்பிய இளம்பெண், ஓடும் பைக்கில் இளம்பெண்ணுக்கு காம வலை விரித்த காமுகன், வலையில் விழுவது போல் நடித்து கொண்டே கணவனுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ், இளைஞரை ரவுண்டு கட்டி உரித்தெடுத்த குடும்பத்தினர்.காம கொடூரன் இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கியது எப்படி? நடந்தது என்ன?இரவு நேரம்.. பரபரப்பான சென்னை, வானகரம் சாலையில் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளைஞரை சரமாரியாக அடித்துள்ளனர். இளைஞர் வலி தாங்க முடியாமல், கத்தி கூச்சல் போடவே, சாலையில் சென்ற சிலர், என்ன ஏது? என்று விசாரித்தனர். அடித்தவர்கள் கூறியதைக் கேட்டவர்கள், ”ஏன்டா... உனக்கு அக்கா, தங்கச்சி இல்லையா? ஒரு பெண்ணிடம் இப்படி தான் நடந்துப்பியா? என்ன தைரியம் இருந்தா இந்த வேலைய பாத்துருப்பே” என்று கேட்டு கொந்தளித்தனர். இவனை இப்படியே விடக்கூடாது, போலீஸ்ல ஒப்படைத்தால் தான், சரியாக வரும் என்று, அந்த இளைஞரை நகர விடாமல் ’சுத்து’ போட்டனர். ”ஒரு பொண்ணு, பைக்குல வந்தா, நீ துணிச்சலா, வேண்டாத வேலை பண்றனா, உன்ன இப்படியே விட்டா, மற்ற பொண்ணுகிட்ட இதவிட மூர்க்கமா நடந்துக்க மாட்டன்னு என்ன நிச்சயம்?” என்று கூறி, அங்கிருந்தவர்கள் இளைஞரை அடித்து துவைத்தனர். கோவத்தை கன்ட்ரோல் பண்ண முடியாத அந்த பெண்ணோட கணவர் கைக்கு, டைமிங்கிங்ல ஒரு கட்டை மாட்டியது. அந்த கட்டையால், இளைஞரை ஆவேசமாக அடித்தார். இதனை தடுத்த அங்கிருந்த சிலர், ”எதுவாக இருந்தாலும், போலீஸ் வரட்டும் அவங்க பாத்துப்பாங்க, நீங்க அடிக்காதீங்க,” என்று தடுத்துள்ளனர். மக்கள் எல்லாரும் அடிக்கிறப்ப, நான் எதுவுமே பண்ணல, என்ன எதுக்கு அடிக்கிறீங்க? என்று எகிறிருக்கார் அந்த இளைஞர். தகவல் தெரிந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மக்கள் பிடித்து வைத்திருந்த அந்த இளைஞரை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த இளைஞரின் பெயர் சிவகுமார். சொந்த ஊர் தேனி. ஊரில் வேலை இன்றி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் அடையாரில் வாடகைக்கு வீடு எடுத்து, ‘ரேபிடோ’ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவ நாளன்று, ஏழு மணிக்கு 21 வயதான இளம்பெண் பள்ளிக்கரணையில் உள்ள உறவினர் வீட்டுக்கு போக, ’ரேபிடோ’ பைக் புக் செய்துள்ளார். சிறிது நேரத்தில் வந்த சிவகுமார், இளம்பெண்ணை, சொன்ன இடத்தில் விட்டுள்ளார். அப்போது, அந்த இளம்பெண், ”அரைமணி நேரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன், மறுபடியும் என்னைய வந்து பிக்கப் பண்ணிக்க முடியுமாண்ணா?” என கேட்டுள்ளார். சிவகுமாரும், தன் ஃபோன் நம்பரை கொடுத்துள்ளார். இளம்பெண் சொன்ன மாதிரியே அரைமணி நேரத்துக்கு அப்புறம் சிவகுமாருக்கு போன் பண்ணி வர சொல்லி இருக்கிறார். அடுத்து, ஸ்பாட்டுக்கு வந்த சிவகுமாரிடம், இளம்பெண் மதுரவாயலில் இறக்கி விடச் சொல்லி இருக்கிறார். அப்போது, பைக்கில் செல்லும் போது, இளம்பெண்ணிடம், இரட்டை அர்த்தமாக பேசி, பாலியல் சீண்டலில் இளைஞர் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில், யாராக இருந்தாலும் கத்தி கூச்சல் போட்டுருப்பார்கள். தன்னை காப்பாற்றிக் கொள்ள, பைக்கில் இருந்து கீழே கூட குதித்து இருப்பார்கள். ஆனால், இந்த இளம்பெண் அந்த இளைஞரிடம் எப்போதும் போல் பேசிக்கொண்டே, வாட்ஸ் ஆப் மூலம் தன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டார். நடந்த விஷயத்தையும் கூறி உள்ளார். உடனே, இளம்பெண்ணின் கணவர், “அவன்கிட்ட நைசா பேச்சு கொடுத்து வானகரத்துக்கு கூப்பிட்டுட்டு வா. நான் பாத்துக்கிறே” என்று சொல்ல, இளம்பெண்ணும் சிவகுமாரிடம் வானகரத்தில் இறக்கி விடுமாறு கூறி உள்ளார். இந்நிலையில், வானகரத்தில், நின்றிருந்த இளம்பெண்ணின் கணவர், அவரது தம்பி என்று உறவினர்கள் கூடி நின்று, இளைஞரை புரட்டி எடுத்துள்ளனர். போலீசாரிடமும் பிடித்துக் கொடுத்துள்ளனர். சிவகுமார் அத்துமீறிய அந்த பெண், திரிபுராவை சேர்ந்தவர். மதுரவாயலில் குடும்பத்தினருடன் தங்கி இருக்கிறார். இந்நிலையில், போலீசாரிடம் சிக்கிய சிவகுமார், வட மாநில இளம்பெண் தான், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகார் கொடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிவகுமாரை சிறையில் அடைத்துள்ளனர். ஆக... இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...’ரேபிடோ’ வாகனத்தில் ஏறுவதற்கு முன், APPல் டிரைவரோட பெயர், பைக் நம்பர், போட்டோ சரியாக இருக்கிறதா? என உறுதிப்படுத்துங்கள்.பயணிக்கும் போது, நண்பர்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ செயலி மூலம் ஷேர் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். டிரைவரால், பிரச்னை வந்தாலோ, உடனடியாக ரேபிடோ அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். பெண்கள் அவசர பாதுகாப்பு எண், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். டிரைவர் யாராவது ஆரம்பத்தில் நல்லவர் மாதிரி பேசி, தனிப்பட்ட தகவல்களை கேட்டால் சொல்லவே கூடாது. உங்களுக்கு டிரைவரால், ஏதாவது தவறு ஏற்படுகிற மாதிரி தெரிந்தால், உடனடியாக, அந்த பயணத்தை ’கேன்சல்’ செய்து விட வேண்டும். அதேநேரம், பெண்கள் தங்களோட பயத்தை வெளி காட்டாமல், அந்த ஆபத்தில் இருந்து எப்படி வெளியே வருவது? என்று சிந்தித்து செயல்பட்டால், இதுபோன்ற ஆட்களிடம் இருந்தும், ஆபத்தில் இருந்தும் தப்பித்து விடலாம்.Happy and safe Journey...