கேரளாவில், கிருஷ்ண ஜெயந்தி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. கடந்த மாதமே தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவானது கொண்டாடப்பட்ட நிலையில், கேரள முறைப்படி, கேரள மக்களால் கிருஷ்ண ஜெயந்தி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழக - கேரள எல்லையில், ஆரியங்காவு பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ராதை, கிருஷ்ணர் வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஏராளமான சிறுவர், சிறுமிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய நிலையில் அதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.