ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணியால் 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கே.எல்.ராகுல், அந்த அணி நிர்வாகம் வழங்கிய கேப்டன் பொறுப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அணியில் தாம் ஒரு வீரராக இருக்க விரும்புவதாக கே.எல் ராகுல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 18 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்ட அக்சர் படேலை கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.