லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.எல். ராகுலை, ஐபிஎல் ஏலத்தில், சென்னை அல்லது பெங்களூரு அணி வாங்க முயற்சிக்கலாம் என ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். இது தொடர்பாக தனியார் விளையாட்டுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கே.எல். ராகுலும் பெங்களூரை சேர்ந்தவர் என்பதால், அவரும் தனது மக்கள் முன் விளையாட விரும்புவார் எனக் கூறினார். இதனால் ஏலத்தில் கே.எல்.ராகுலை பெங்களூரு அணி வாங்கும் வாய்ப்பு அதிகம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.