பிரதமர் மோடி அழைப்பை ஏற்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியா வருகிறார். நாளை முதல் இரு நாட்கள் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவருடன் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகக் குழு உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகைத் தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.