கனடாவின் பிராம்டன் நகரில் இந்து கோவில் ஒன்றில் பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியாவின் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொரோன்டோவுக்கு அருகில் உள்ள பிராம்டனின் இந்து சபா மந்திருடன் சேர்ந்து இந்திய துணைத் தூதரகம் நடத்திய முகாமில் இந்திய விரோத சக்திகள் தாக்குதல் தடத்தியதை கண்டிப்பதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு கனடா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வந்த பக்தர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கம்புகளால் தாக்கும் வீடியோ சமூகதளங்களில் பரவி வருகிறது.