கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோயில் சமயவிளக்கு திருவிழாவில், ஆண்கள் பெண்களைப் போல் வேடமணிந்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் தங்கள் தொழில் சிறக்கவும், செல்வம் பெருகவும் பெண்களை போல் பட்டுப் புடவை, தாவணி போன்ற உடைகளை அணிந்து வந்து, ஐந்து திரியிட்ட விளக்குகளை மலர்களுடன் ஏந்தி, குடும்பத்தினருடன் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசித்து வழிபாடு செய்தனர்.