தமிழகத்தில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,கரூர் பரமத்தியில் 102 புள்ளி 2 டிகிரி ஃபாரன்ஹீட், திருப்பத்தூரில் 101 புள்ளி 3 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோட்டில் 100 புள்ளி 76 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரையில் 100 புள்ளி 4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.