லட்டு குறித்து நகைச்சுவையாகப் பேசியதற்காக, ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் மெய்யழகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, லட்டு பற்றிய டாபிக் வேண்டாம், அது உணர்ச்சிப்பூர்வமானது என சிரித்தபடி கூறினார்.இதற்கு பவன் கல்யாண் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதற்கு வருத்தம் தெரிவித்து கார்த்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், தாம் பேசியது தவறான புரிதலை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பவன் கல்யாணை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.