மேகதாது அணை கட்ட தீவிரமாக முயன்று வரும் கர்நாடகாவை தடுக்காமல் மத்திய அரசும், தமிழக அரசும் வேடிக்கை பார்ப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கும் வரை, கர்நாடக அரசுடன் தமிழக அரசு எந்தவித உறவையும் வைத்துக்கொள்ள கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.