Also Watch
Read this
ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மார்.. பிரேசில் வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்றார்
இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
Updated: Sep 06, 2024 02:21 AM
பாரீஸ் பாராலிம்பிக் ஜூடோ போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
60 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் கபில் பர்மார், பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை 10-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
பாராலிம்பிக் வரலாற்றில் ஜூடோ விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved