சில நடிகர்கள் திரையில் லாக் அப் மரணங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விட்டு கட்சி தொடங்கிய பின் மக்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர் என விஜய் குறித்த கேள்விக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி காட்டமாக பதிலளித்துள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் போராட்டம் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது என மறைமுகமாக விமர்சித்தார்.