விஜய் சேதுபதியை விரும்பும் மலையாள பெண்கள்தமிழ் சினிமாவுல தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து தவிர்க்கமுடியாத இயக்குநரா இருப்பவர் தான் வெற்றிமாறன் . இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து, விடுதலை படத்தோட இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவாகியிருக்கு. இதுல விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், சேத்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சிருக்காங்க.விடுதலை 2 வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில பட புரோமோஷன் பணிகள்ல படக்குழு ஈடுபட்டு வந்துட்ருக்கு. இந்த நிலையில பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மஞ்சுவாரியர் விஜய் சேதுபதி குறித்தும் கேரளாவில் அவருக்கு இருக்கும் கிரேஸ் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்திருக்காங்க. இது தொடர்பா பேசுன மஞ்சுவாரியர் ரொமாண்டிக் படத்தில நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்ததாகவும், தற்போது, விடுதலை படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியிருப்பதாகவும் தெரிவிச்சிருக்காங்க.அதோடு கேரள பெண்களிடம் அவர்களுக்கு பிடித்த ரொமாண்டிக் ஹீரோ குறித்து நடத்தப்பட்ட ஆய்வில விஜய் சேதுபதி தான் முதலிடம் பிடிச்சதாகவும், அவருக்கு அங்கு நிறைய ரசிகைகள் உள்ளதாகவும் தெரிவிச்சிருக்காங்க..PAN இந்திய இயக்குநருடன் கை கோர்க்கும் சூர்யாகங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில சூர்யா 44 படத்துல நடிச்சி முடிச்சிருக்காரு. இத தொடர்ந்து RJ பாலாஜி இயக்கத்தில அவரது 45வது படத்தை தொடங்கியிருக்காரு. தற்போது சூர்யா 45 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்துட்ருக்கு.இந்த நிலையில சூர்யாவின் அடுத்த படம் பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்குது. அதன்படி லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி உடன் சூர்யா கூட்டணி வைக்க இருப்பதாகவும், சித்தாரா நிறுவனம் சூர்யா படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கு.இந்தியாவுல மாருதி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்பான கதைய மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுது. A.R.முருகதாசுடன் இணைந்த சந்தோஷ் நாராயணன்ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் , நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம் சிக்கந்தர். பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கும் இந்த படத்துல காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில நடிச்சி வந்துட்ருக்காங்க. ஆக்சன் கதைகளத்தில உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என நடிகர் சல்மான்கான் எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்ருந்தாரு. இந்த நிலையில சிக்கந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களுக்கு இசையமைச்சு வரும் சந்தோஷ் நாராயணன், சிக்கர் மூலமா முதல் முறையா பாலிவுட்ல கால்பதிக்க உள்ளது அவரது ரசிகர்கள குஷியில ஆழ்த்தியிருக்கு.சமீபத்துல வந்த கல்கி 2898 AD படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அமைத்திருந்த இசை பெரும் வரவேற்ப பெற்று வசூலை வாரிக்குவிச்ச நிலையில, சிக்கந்தர் படம் மீது பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு.. ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த பட அப்டேட்நடிகர் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் குட்பேட் அக்லி. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்துல த்ரிஷா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் நடிக்கிறாங்க. மேலும் இப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைச்சிட்டு வர்றாரு. இந்த நிலையில ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கு.அதன்படி , ஆதிக் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி 2 படத்தை இயக்க இருப்பதா கூறப்படுது. துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்கும் திட்டத்துல இருந்த நிலையில, அந்த படம் துவங்குவது தாமதமாகுதாம்.இதனால அதற்கு முன்னதா மார்க் ஆண்டனி 2 படத்துல விஷால் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்ப கூடிய விரைவிலேயே எதிர்பார்க்கலாம்.'NEEK' படத்தின் அடுத்த பாடல் அப்டேட்ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்துல பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிச்சிருக்கு. ஏற்கனவே படத்தோட முதல் பாடலான கோல்டன் ஸ்பாரோ வெளியாகி பயங்கர ஹிட் அடிச்சுது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் காதல் ஃபெயில் பாடல் வெளியாகி பரவலா கவனம் ஈர்த்துச்சு. இந்த நிலையில இந்த படத்தோட அடுத்த பாடல் குறித்த அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்திருக்காரு.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில, “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இருந்து அடுத்து வெளியாகவிருக்கும் பாடல், இந்த படத்திலே எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. மிக விரைவில் அது வரும்” என தனுஷை டேக் செய்துருக்காரு. அந்த வகையில் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுது.கங்குவா Flop.. டென்ஷனான விஜய்சேதுபதிநடிகர் விஜய் சேதுபதி இப்போ விடுதலை 2 பட ப்ரொமோஷன்-ல ரொம்ப பிசியா இருக்காரு.. தமிழ்ல மட்டுமில்லாம தெலுங்கு பிக் பாஸிலும் விடுதலை 2 பட ப்ரோமோஷன் பண்ணிருந்தாங்க படக்குழு .. இப்படி விடுதலை 2 ப்ரோமோஷன் அனல் பறந்துகிட்டு இருக்குற நிலையில, விஜய் சேதுபதி ரீசண்ட்டா கொடுத்த பேட்டி ஒன்னுல தெலுங்கு பத்திரிகையாளர் ஒருவர் கங்குவாவின் தோல்வி குறித்த கேள்விய எழுப்ப, உடனே செம்ம டென்ஷன் ஆகிட்டாரு விஜய் சேதுபதி.அதோட, “நான் என் பட ப்ரோமோஷனுக்காக வந்திருக்கேன். அதபத்தி நான் ஏன் பேசணும், எல்லா படமும் வெற்றி அடையனும் என்ற எண்ணத்துல தான் எடுக்குறாங்க.. சின்ன ஹோட்டல் தொழிலா இருந்தாலும் சரி பெரிய ஹோட்டல் தொழிலா இருந்தாலும் சரி அது வெற்றியடையணும் என்ற நோக்கத்துல தான் நடத்துவாங்க.நானும் பல தோல்விகளை சந்திச்சு இருக்கேன்.. ட்ரோல்களை பார்த்து இருக்கேன்”னு பதில் சொல்லிருக்காரு விஜய் சேதுபதி.. இப்போ இந்த வீடியோ சோசியல் மீடியாவுல வைரல் ஆகிட்டு வருது..பிரபாஸுடன் இணையும் முக்கிய நடிகைசலார், கல்கி 2898 ஏடி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட்ட கொடுத்தவரு பிரபாஸ்.. அதிகமா பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்குற பிரபாஸ், ஸ்பிரிட், சலார் 2, ராஜா சாப் என ஒரு பெரிய பட லிஸ்ட்டையே கையில வெச்சுருக்காரு..இதுல பிரபாஸ் நடிக்க இருக்கும் 25வது படமான ஸ்பிரிட் படத்த அர்ஜூன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களை கொடுத்த பிரபல இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்க இருக்காரு.. இந்தப் படத்துல போலீசா நடிக்குற பிரபாஸ்க்கு வில்லனா கொரியன் சூப்பர் ஸ்டாரையும் களத்துல இறக்க இருக்குறதா சொல்லப்படுற நிலையில, சைஃப் அலிகான், கரீனா கபூர் என நட்சத்திர பட்டாளங்களும் இணைஞ்சு இருக்காங்க..அதோட இந்தப் படம் சுமார் 300 கோடி பட்ஜெட்ல எடுக்க இருக்குறதாவும் தகவல் வெளியாகி இருக்கு.. இப்போ இதுல இன்னொரு சூப்பர் விஷயம் என்னனா சீதா ராமம் பட ஹீரோயின் மிருணாள் தாக்கூர் ஸ்பிரிட் படத்துல நடிக்க இருக்குறதா தகவல் வெளிவந்திருக்கு.. மிருணாளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்குறதால படத்தோட எதிர்ப்பார்ப்பு ரொம்பவே அதிகமாகி இருக்கு... ஸ்பிரிட் படம் 2026ல 8 மொழிகள்ல வெளியாக இருக்கு..70 வயதிலும் கலக்கும் Supreme ஸ்டார்இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்துல, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள The Smile Man திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகுது.. இது அவரோட 150வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்காக நமக்கு பிரத்யேகமாக அளிச்ச பேட்டியில் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தாரு சரத்குமார். அதுல படத்தின் கதைக்களம் கோயம்புத்தூரை சுற்றியே நடப்பதாகவும், அதனால சில காட்சிகள கேரளாவில் shoot செய்ததாகவும் தெரிவிச்சாரு. சரத்குமார் தினமும் உடற்பயிற்சியில ஈடுபடக்கூடியவர் என்பதால அங்கேயும் அவர் GYM க்கு செல்லும் வழக்கத்தை விடலையாம். அங்கு இருக்கும் மக்களுக்கு எந்த இடஞ்சல்களும் வரக்கூடாதுங்குறதுக்காக காலை 4:30 மணிக்கெல்லாம் உடற்பயிற்சி செய்ய GYM க்கு போய்டுவாராம். அதே போல் ஷூட்டிங் spot ல் சுற்றி இருப்பவர்கள கவனிச்சிட்டே இருப்பாராம். தொலைவுல இருந்தே யாருக்கு என்ன வேணும், என்ன யோசிக்குறாங்க என்பதை புரிஞ்சிகிட்டு உடனடியாக உதவியாளர்களை அழைச்சு அதை சரி செய்ய முயற்சிப்பாராம்.