தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமாலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்ரமணி ஆகியோருக்கு தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த கமாலினிக்கும், டெல்லியில் நடைபெற்ற கோ-கோ உலகக்கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த சுப்ரமணிக்கும் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.