நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 36 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைப் படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்று கூறி வருகின்றனர்.