நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், அண்மைக்காலமாகவே நாதக நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், தமது விலகலை அறிவித்துள்ள அவர், மிழ்த்தேசிய பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் என தெரிவித்துள்ளார்.