ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுடன் நடந்த விவாதத்தை தமது சிறந்த தேர்தல் விவாதம் என குடியரசுக் கட்சி வேட்பாளரும் அமெரிக்க முன்னாள் அதிபருமான டிரம்ப் சிலாகித்துள்ளார். பென்சில்வேனியா மாநிலம் பிலடெல்பியாவில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிசுக்கு இடையேயான முதலாவது டிவி விவாதம் நேரலையில் ஒளிபரப்பானது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,கமலாவின் வெளியுறவுக் கொள்கை பலவீனமாக இருப்பதாக சாடினார்.