காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக இருந்த செம்மல், தனக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செம்மலின் பாதுகாப்பு அதிகாரியாக பணி புரிந்த லோகஷ்வரன் என்பவரின் மாமனார் சிவகுமாருக்கும், முருகன் என்பவருக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்போதைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல், தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார். செம்மலுக்கும் லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனை காரணமாக, கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை வழக்கு தொடர்ந்ததையடுத்து, விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நீதிபதி செம்மலின், மனு திரும்ப பெறப்பட்டதால், தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.