”தங்கள் தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறாரா?” என சமூக வலை தளத்தில் கேள்வி எழுப்பிய விஜய் ரசிகருக்கு, இயக்குநரும், நடிகருமான லிவிங்ஸ்டன் மகள், பதிலடி கொடுத்த பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது. ஜோவிதா லிவிங்ஸ்டன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா லிவிங்ஸ்டன் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் கமெண்ட்ஸ் செக்சனில் விஜய் ரசிகர் ஒருவர், "உங்கள் அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?" என்று கேள்வி கேட்டார். இந்த கேள்வியால் கடுப்பான ஜோவிதா, "ஓ... ஹாய் TVK. நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து விட்டதாக அல்லவா நினைத்தேன்" என்று பதிலடி கொடுத்தார். இந்த பதிவு சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.