அமெரிக்க அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் அதிபர் ஜோ பைடன் வாக்களித்து தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார். முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி வில்மிங்டன் டெலாவேர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து ஜோ பைடன் தனது வாக்கை செலுத்தினார்.