Central Government Jobs-ல Place ஆகணும்னு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருக்குற இளைஞர்களுக்காகவே ஒரு அருமையான வாய்ப்பு வந்திருக்கு. மத்திய வருவாய் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய சுங்கத்துறை அதாவது Customs Office -ல வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கு. நம்ம நாட்டுல இருக்குற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்கள்ல சுங்கவரி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது கஸ்டம்ஸ் அலுவலர்களின் பணி. நாடு முழுவதுமே இயங்கக்கூடிய இந்த துறைக்கு, இப்போ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மண்டல சுங்க அலுவலகத்துல காலியா இருக்குற 22 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கு. கல்வித் தகுதியை பொறுத்த வரை, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவங்க, 18 - 25 வயசுக்குள்ள இருக்குறவங்க இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு Exams கண்டிப்பா இருக்கு. எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவாங்க. தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் கமிஷன்படி 18 ஆயிரம் ரூபாய் முதல் 56 ஆயிரத்து 900 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுவதா தெரிவிக்கப்பட்டிருக்கு. இந்த பணியிடங்களுக்கு OFFLINE-ல, அதாவது தபால் வழியா மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவங்க உங்களோட கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், கூடவே உங்களோட Bio Data , Passport Size Photo எல்லாத்தையும் The Assistant Commissioner of Customs (Personnel & Establishment Section), 2nd Floor, New Custom House, Ballard Estate, Mumbai - 400001 என்ற முகவரிக்கு வரும் 16ம் தேதிக்குள்ள மறக்காம அனுப்பிருங்க... இந்த பணியிடங்கள் பற்றி கூடுதல் விவரம் தெரிஞ்சுக்கணும்னு நினைச்சீங்கனா www.mumbaicustomszone1.gov.in பார்த்துக்கலாம்.