மத்திய அரசின் முக்கிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் அதாவது BEML நிறுவனத்தில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் Junior Executive பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தான் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? BEML நிறுவனத்தில் மொத்தம் 100 Junior Executive பணிக்கான காலியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.E/B.Tech படிப்பை 60% மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு பொருத்தவரை, 18 வயதுக்கு மேல் மற்றும் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. Junior Executive பதவிக்கு Freshers-களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும்போது, முதலாம் ஆண்டு ரூ.35,000, இரண்டாவது ஆண்டு ரூ.37,500, மூன்றாவது ஆண்டு ரூ.40,000 என சம்பளம் படிப்படியாக உயர்த்தப்படுகிறது. இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அதாவது Written test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bemlindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் 12ம் தேதிக்குள் ஆன்-லைனில் மறக்காமல் விண்ணப்பிக்கவும்.