ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடைபெற்ற அதற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யா-அமெரிக்கா பங்கேற்றது. இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்காத நிலையில், டிரம்பை கடுமையாக விமர்சித்தார் ஜெலன்ஸ்கி . இதனிடையே ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது எனவும், தான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ, உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை எனவும் டிரம்ப் தெரிவித்தார்.