இலங்கை அணியோட இடைக்கால பயிற்சியாளரா இருந்து வந்த அந்நாட்டு முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா இப்போ முழு நேர தலைமை பயிற்சியாளாரா நியமிக்கப்பட்டு இருக்காரு. இதுகுறித்து தெரிவிச்சு இருக்கிற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இலங்கை அணியோட முழு நேர தலைமை பயிற்சியாளரா ஜெயசூர்யா செயல்படுவார்னு தெரிவிச்சு இருக்காங்க . பயிற்சியாளரா ஜெயசூர்யாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கபோகிறது அப்படின்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரிச்சு இருக்கு.