நடிகர் ஜெயம் ரவியின் 34-வது திரைப்படத்தை, டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் 'அகிலன்' மற்றும் 'பிரதர்' படங்களை இயக்கிய ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.