அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஊழலுக்காக இரண்டு முறை முதலமைச்சர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா என சுட்டிக் காட்டியுள்ளார்.