முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வன்-ல் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.