புதுடெல்லியில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டியின் பளுதூக்குதலில் ஜாண்டு குமார், சீமா ராணி தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். டெல்லியில் 5-வது நாள் நடைபெற்ற போட்டியின் பளுதூக்குதலில், மகளிர் எலைட் 61 கிலோ எடை பிரிவில் பஞ்சாபை சேர்ந்த சீமா ராணி 97 கிலோ எடையை தூக்கி தேசிய சாதனையை படைத்தார். அதே போல் ஆண்கள் எலைட் 72 கிலோ எடை பிரிவில் பீகாரை சேர்ந்த ஜாண்டு குமார் 206 கிலோ எடையை தூக்கி தேசிய சாதனையை படைத்தார். இந்த தொடரில் தற்போது வரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் பதக்க பட்டியலில் அரியானா முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது.