ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின் போது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து முதலமைச்சர் உமர் அப்துல்லா எடுத்து கூறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.