விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரரை மதுபோதையில் தாக்கியதாக ஜெயிலர் பட வில்லனும் மலையாள நடிகருமான விநாயகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரரை நடிகர் விநாயகன் மது போதையில் தாக்கியதாக புகார் எழுந்தது.இந்நிலையில் நடிகர் விநாயகனை கைது செய்த சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் அவரை, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.