பிரேசிலில் உயிருக்கு போராடியபடி, ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜாகுவாரை காவலர்கள் பத்திரமாக மீட்ட காணொலி, இணையத்தில் வைரலாகி வருகிறது. அமேசானில் உள்ள ஆற்றில், உடல் முழுக்க காயங்களுடன் பரிதாப நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜாகுவாரை, மிதவைப் படகு மூலம், காவலர்கள் மீட்டுள்ளனர். இதையடுத்து ஜாகுவாரை ஆராய்ந்த கால்நடை மருத்துவர்கள், அதன் உடலில் இருந்து சுமார் 30 புல்லட்டுகளை எடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாரேனும் இதனை வேட்டையாட முயன்றார்களா? என்ற அடிப்படையில் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.