ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது. ரதங்களில் வண்ணமயமான குதிரை வாகனங்கள் பொருத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அணிவகுத்து பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி சென்றன. அப்போது, லட்சக்கணக்கான பக்தர்களின் "ஜெய் ஜெகந்நாத்", "ஹரி போல்" கோஷம் விண்ணை பிளந்தது.