விஜயதசமிக்கு துப்பாக்கியை வைத்து பூஜை செய்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா-வின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து ரிவாபா ஜடேஜா தற்போது ஜாம்நகர் வடக்குத்தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் நிலையில் தற்போது டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவீந்திர ஜடேஜாவும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் ஜாம்நகரில் விமரிசையாக நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்ட ரிவாபா ஜடேஜா, பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்து பூஜை செய்த காட்சி வெளியாகியுள்ளது.