BANK ACCOUNT OPEN பண்றதவிட, அதை MAINTAIN பண்றது பெரிய TASK. ஆனா, BANK ACCOUNTல இருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமே இல்லாம அனுப்பலாம்ன்னு சொன்னால் நம்ப முடியுதா? YES... RBI இப்போ அறிவிச்சிருக்கும் இந்த சலுகைகள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு "JACKPOT" தான். RBI வெளியிட்ட அறிவிப்பு என்ன? இதுல இருக்கும் சலுகைகள் என்னென்ன? யார்யார் பயன்பெறலாம்? வங்கிக் கணக்கு வச்சிருக்குறவங்க எப்போதுமே MINIMUM BALANCE MAINTAIN பண்றது அவசியம். BUT, MINIMUM BALANCE இல்லாதபட்சத்துல வங்கிகள் அபராதம் விதிச்சு, குறிப்பிட்ட தொகைய பிடித்தம் செய்வாங்க.ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில, MINIMUM BALANCE இல்லாத சேமிப்பு கணக்கு, அதாவது ZERO BALANCE ACCOUNT தொடங்கலாம்ன்னு RBI கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகம் செஞ்சாங்க. இது BASIC SAVINGS BANK DEPOSIT ACCOUNT - B S B D A என்ற பெயர்ல அமல்படுத்தப்பட்டுச்சு.இப்போ இந்த "அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள்" அதாவது ZERO BALANCE ACCOUNTல பல சீர்திருத்தங்களை RBI அறிமுகப்படுத்தியிருக்கு. BANK ACCOUNTல எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி அனுப்பும், கட்டணமில்லா பரிவர்த்தனை வசதியை அறிமுகப்டுத்தியிருக்கு RBI. ZERO BALANCE ACCOUNT வச்சிருக்கும் நபர்களுக்கு ATM மற்றும் ATM-CUM-DEBIT CARDS, இலவசமா வழங்கப்படும்ன்னு அறிவிச்சிருக்கு RBI. அதேபோல, இந்த ZERO BALANCE ACCOUNT வச்சிருக்கும் நபர்கள், இந்த வங்கியோட ATM இல்லனா பிற வங்கிகளின் ATMகளில் மாசத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை எடுத்துக்கலாம்ன்னு RBI அறிவிச்சியிருக்கு. முக்கியமா, UPI, NEFT, RTGS, IMPSன்னு DIGITAL வழியாக பணம் பெறும் DIGITAL PAYMENTS இந்த கணக்குல அடங்காதுனும் RBI சொல்லியிருக்கு.ATM CARD, CHEQUE BOOKS, INTERNET & MOBILE BANKINGன்னு எந்த சேவைகளையும் பெற வாடிக்கையாளர்கள கட்டாயப்படுத்த கூடாதுன்னு RBI, எல்லா வங்கிகளுக்கும் அறிவுறுத்தியிருக்கு. இந்த சேவைகளை பெற விரும்பும் நபர்கள், தங்களோட சேமிப்பு கணக்கை, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டாக மாத்திக்கலாம்ன்னு சொல்லும் RBI, அதனை வங்கிகள் 7 நாட்களுக்குள்ள பரிசீலிக்க வேண்டும்ன்னும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கு. இதுல வடிக்கையாளர்களுக்கான T&C அடங்கும். அதாவது ஒரு வாடிக்கையாளர், ஒன்றுக்கும் மேல ZERO BALANCE ACCOUNT வச்சிருக்க முடியாதுன்னு சொல்லும் RBI, வாடிக்கையாளர் ZERO BALANCE ACCOUNT தொடங்கும்போதே இதனை எழுத்துப்பூர்வமா வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும்ன்னும் அறிவுறுத்தியிருக்கு. எது எப்படினாலும், BANK ACCOUNT OPEN பண்றதவிட, அதை MAINTAIN பண்றது பெரிய சவாலா இருக்கும் நிலையில் RBI அறிவித்துள்ள இந்த சலுகைகள் வரவேற்பை பெற்றுவருது.